ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Sunday, December 07, 2008

சபிக்கப்பட்ட பரம்பரை…..

சபிக்கப்பட்ட பரம்பரை…..

தன் வாழ்நாளின் சந்தோச தரணங்களை
சிலிர்ப்போடு அசைபோடுவார் அப்பப்பா – அது
அவராயுளின் அரைப்பகுதி

பாடசாலைக் காலம்வரை
பட்டாம்பூச்சி வாழ்க்கையென்று
மகிழ்வார் அப்பா

தவழ்ந்தது முதல் வேட்டோசை கேட்டு
வளர்ந்தேன் நான்

தம்பி வயிற்றில் இருக்கையில்
'செல்' லடிக்கு மத்தியில்
இடம்பெயர்ந்தாள் அன்னை

நாளை என் பிள்ளையின் நாட்குறிப்பினை
யுத்தத்தின் கரங்கள் எழுதும்
இரத்த மை கொண்டு……….



தங்கராசா-ஜீவராஜ்
திருகோணமலை, இலங்கை