ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Thursday, December 04, 2008

தளர்வில்லை..

அம்மாவின் விரல் பிடித்து
நடை பயின்ற
செம்மண் வீதிகளை
கூகுல் வழியே ரசித்து பார்க்கிறோம்

கடந்து வந்த பாதைகளில்
ரணங்களை விதைத்துவிட்டு
தூரத்து விடியலுக்காய்
செல்லாக் காசாய் நாம்

ரத்தம் வடிந்த இடத்தில்
மொய்க்கும் ஈக்களுக்கு கூட
திகட்டி இருக்கும்
ஆராஜகமே உனக்கேன்
ரத்தவெறி அடங்கவில்லை

கண்ணில் நீரும் இல்லை
நெஞ்சில் பயமும் இல்லை
நாளை விடியல் என
சொல்லும் எமக்கு
என்றுமே தளர்வும் இல்லை..

@
தேனுசா ஈசுவரன்