ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Wednesday, November 05, 2008

ஆ.முத்துராமலிங்கம் கவிதைகள்.

http://www.thamizmanam.com/
பெய்த மழையின்
அளவை சொன்னது ஒழுகும்
ஏழை குடிசையில் நிரம்பிய
பாத்திரம்.!

புதிதாய்...
இன்னொரு மரத்தை
நட்டு வைக்க வேண்டாம்
இருக்கும் மரத்தையாவது
விட்டு வையுங்கள்
போதும்.....
இன்னொரு
தலைமுறையினரின்
தாகம் தீர்க்க!

கடற்கரையில்..
மணல் வீடுக் கட்டி விளையாடும்
குழந்தை போலவே - மனம்
காதலின் கரையில்..
கோட்டைகள் கட்டுகின்றன
பாவம் அழிக்கவே காத்திருக்கின்றன
அலைகள்!

ஒரு ரூபாய்க்கு அரிசி...
வாங்க முடியவில்லை
அழும் குழந்தையின்
பசியாற்ற
பால்... புட்டி... ரப்பர்!