ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Wednesday, November 12, 2008

ஞாபகத்தின் மழைத்துளிகள் - ஆ.முத்துராமலிங்கம்

முன்பு மழை பெய்தது…

வாசல் தொட்டு ஓடும்
மழை நீரில் காகிதக் கப்பல்கள்
விட்டோம் ஏரியில் மிதந்தது

அம்மா திட்ட திட்ட
முற்றத்தில் தேங்கிய மழைநீரில்
நீச்சலடித்தோம்

அவித்த
வேர்கடலை வாசத்துடன்
கருப்பட்டிகாபி ருசித்து
மழை ரசித்தோம்

மழைத்துளி விழுந்தெழும்
பச்சமண் வாசனை...
இன்னமும் மனதுக்குள் படிந்திருக்கின்றது.


இன்றும் மழை பெய்கின்றது...

காலமாற்றத்தில் ஏரிகளெல்லாம்
சேரிகளாகிவிட்டன
தெருக்களெ தற்காலிக
ஏரிகள்!

குப்பைகள் கப்பல்களானபின்
நாம் விட்ட காகிதக் கப்பல்கள்
ஞாபகக்கின்ற்றில் ஆழத்தில்
தரைதட்டி கவிழ்ந்து கிடக்கின்றன

அபாய பகுதிகளைத் தாண்டி
வேர்கடலை வாங்க
கடைக்கு போக முடியவில்லை!


அன்று மழை பெய்தது
தாய் பறவையின் வருகையுனர்ந்து
வாய்பிளந்து குதூகளிக்கும் குஞ்சுகளைப் போல்
மழையின் முன் குழந்தைகளானோம்

இன்றும் மழை பெய்கின்றது
வெட்கமில்லாமல் சன்னலை சாத்திவிட்டு
வீட்டின் உள் அறையில் படுக்கையிலமர்ந்து
கனிணியில் தேடுகின்றோம் மழைக்காலங்களில்
பாதுகாப்பாக இருப்பது எப்படி என்று!