ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Thursday, December 04, 2008

எங்கள் வாழ்க்கையின் முரண்பாடுகள்

எங்கள் வாழ்க்கையின் முரண்பாடுகள்

வியர்க்கும் எமக்கு விசிறி விடுகிறது
படுக்கையிலே விழும்
ஏவுகணை….
பல்லாங்குளியாட சன்னங்களும்
ஓழித்து
உயிர் பிழைத்து விளையாடிட
குண்டு வெடிப்புப் பள்ளங்களுமாக கழியும் பொழுதுகள் …!
ஓவ்வொன்றையும் எழுதி முடிக்கையிலே
கடைசிக் கவிதை இதுவா என
வந்து விசாரிக்கிறது சிப்பாய்களின் பாதணி ஓசை …!

மட்டுவில் ஞானக்குமாரன் (இலங்கை)