ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Sunday, December 07, 2008

காடு

காடு

இசையில் நனைந்து இணைந்தாய்
இதயம் கிளர்ந்து எழுந்தாய்
இருப்பை உணர்த்த நிமிர்ந்தாய்
இருட்டில் ஒளியாய் அலைந்தாய்

வீரம் உனக்குள் செரிந்தாய்
வீரியம் எமக்குச் சொரிந்தாய்
வீதியை அமைத்து நடந்தாய்
வீடே உமக்கு காடாய்


கார்மேக் கூட்டம் கண்டு
மயில் வந்து நடனம் ஆடும்
மயில் நடனக்காட்சி கண்டு
குயில் வெற்றிப்பாடல் பாடும்

நரிகளெல்லாம் தந்திரம் தோற்று
நால்திசையும் ஓடி ஒழியும்
சீரிவரும் சிறுத்தைக்கூட்டம்
சீற்றமுடன் கைகள் குலுக்க - அங்கே

புலி வரும் புலி வரும்
வெற்றிப்புன்னகை பூத்த முகமாய்

தமிழீழம் ஒருநாள் வெல்லும்
எமது இருப்பை அதுவே சொல்லும்.

----சே.ரெ.பட்டணம் மணி