ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Thursday, December 04, 2008

ஈழம்

1.
விடியற்க்காலைகள் விடிகின்றன.
உங்களிடத்தில் பனித்துளியுடனும்
எங்களிடத்தில் கண்ணீர்த்துளியுடனும்.

----- * *-----

2.
பிறந்தமண்
இருப்பிடம்
உடமைகள் அனைத்தையும்
தீக்கக்கும் இராணுவ வாகணங்களுக்கும்
விமானக்குண்டுகளுக்கும் இறையாக்கிவிட்டு
இறைந்த பருக்கையாய் மீய்ந்த வாழ்க்கையோடு
நூலறுந்தப் பட்டம் போல் திசையற்று அலையும்
எம்மக்களின் நிலை பார்த்து கண்மூட்க்கொண்ட
உலகமே….. நீ சொல்லாதே
தீவிரவாதம் எதுவென்று!

----- * *-----

ஆ.முத்துராமலிங்கம்.
சாலிகிராமம்.