ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Saturday, December 20, 2008

என் தேசம்.

என் தேசம்.
****************
நலிவுற்றுக் கிடக்கிறது என் நாடு.
மெலிந்து கிடக்கிறது என் தேசம்.
பாதைகளின் வழியடைப்பால்
குருதிக் கிடங்குகளுக்குள்ளும்
குண்டுக் குளங்களுக்குள்ளும்
நீந்தியபடியே எங்கள் பிரயாணங்கள்.
வடகிழக்குத் திசைகாட்டியிலோ"சுடுகாடு இங்கே".
சுத்தம் செய்யும் புத்தன்கூட அசுத்தமாய்.
போதி மரத்துக்குக் கீழும் அழுகுரல் கேட்கிறதாம்.
சித்தார்த்தனும் சந்தேகத்தோடு!!!
ஹேமா(சுவிஸ்)