ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Thursday, December 04, 2008

பிணி.

பிணி.

பின்னிரவு மழையைப்போல்
நீண்டு வழிகின்றது எம்மக்களின்
கண்ணீரும், குருதியும்.

பழைய புகைப்படத்தைப்போல்
மங்கிய நிலையில் விழுந்து உடைகின்றது
அவர்களின் வாழ்க்கை.

ஓ… இறைவா
உலகிற்க்கெல்லாம் சூரியக்கரையில்
விடியலை வைத்த நீ
அகதிகளாய் விரட்டப்படும்
எம்தாய் மக்களின் விடியலை ஏன்
சூனியக்கரங்களில் சிக்கவைத்தாய்?

-
ஆ.முத்துராமலிங்கம்
சாலிகிராமம்.