ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்

ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்
ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து ‘தை’ கவிதையிதழ்கவிதை உறவுகளே..வரவிருக்கிற ‘தை’ கவிதையிதழ் ஈழத்தமிழரின் வலிகளை சுமந்து வெளிவரவுள்ளது.கவிஞர்கள் தமிழீழ மக்களின் வலிகளை 10 வரிகளுக்குள் கவிதைகளாக்கி தை இதழின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.
thaiithaz@gmail.com
குருதிக் கசியும் மொழியில்நாடிழந்த புலம்பெயர் வாழ்வைஈழத்தமிழரின் இன்னல்களை கவிதைகளாக்குங்கள்.சிறந்த கவிதைகள் தை இதழிலும்பாராட்டுதலுக்குரிய கவிதைகள் தை வலைப்பதிவிலும் வெளிவரும்.அறிவுமதி அவர்களால் தேர்வு செய்யப்படும் கவிதையை எழுதிய கவிஞருக்கு பரிசும் அளிக்கப்படும்.
மிக்க தோழமையோடு
இசாக்

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

ஈழத்தமிழர் வலி சுமந்த "தை"

Sunday, December 07, 2008

"தை" ஈழ வலியில் என்னையும் அழுத்திக்கொண்டதில் பீறீட்டவை இவை

"தை" ஈழ வலியில் என்னையும் அழுத்திக்கொண்டதில் பீறீட்டவை இவை

அன்புடன்
கவிமதி / துபாய்
------------------------------------------------------------------
முள்குத்தியது
வலிக்கவில்லை
கட்டை கால்


பகுதி தேர்வு
எழுதிகொண்டிருக்கையில்
பள்ளிக்கூடம்
இடம்பெயர்ந்தது
பதுங்குகுழிக்கு

கனவுகளை ஊண்ட
நிலம் கேட்டோம்
தூக்கத்தை களைத்தீர்கள்

வானவில் வரைய
வண்ணம் கேட்டோம்
தூரிகையை முரித்தீர்கள்

சுவர்கோழிகளின்
பாடல் கேட்டோம்
காதுகளை அறுத்தீர்கள்

கேட்டதையெல்லாம்
தராத நீங்கள்
கேட்காமல் ஏன் தந்தீர்கள்

அகதிமுகாம்களை